Home Uncategorized இன்று இந்திய செய்தித்தாள் தினம்!!

இன்று இந்திய செய்தித்தாள் தினம்!!

இந்திய செய்தித்தாள் தினம் ஆண்டுதோறும் ஜனவரி 29ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

இந்தியாவில் முதன்முதலாக பெங்கால் கெஜெட் என்கிற வார இதழ் வெளிவந்தது. இதனை ஆங்கிலேயரான ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கீ என்பவர் 1780ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி வெளியிட்டார். இப்பத்திரிக்கை கொல்கத்தாவிலிருந்து வெளிவந்தது. அரசியல் மற்றும் வர்த்தக ரீதியான இதழாக வெளிவந்தது. அப்போது நடந்த போர்ச் செய்திகள் பத்திரிகையில் வெளி வந்தது. அது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்தியாவில் வெளிவந்த முதல் வார இதழ் என்பதால் அத்தினத்தை இந்திய செய்தித்தாள் தினமாக கொண்டாடப்படுகிறது.

Exit mobile version