Home Uncategorized இன்று முதல் தாஜ்மகாலை இரவு நேரத்திலும் பார்வையிட அனுமதி

இன்று முதல் தாஜ்மகாலை இரவு நேரத்திலும் பார்வையிட அனுமதி

கொரோனா பெருந்தொற்று காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டிருந்தது. அதனையொட்டி கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 17-ம் தேதி தாஜ்மகால் மூடப்பட்டது. 

இந்நிலையில், தாஜ்மகால் இன்று முதல் இரவு நேர பார்வைக்காக திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
 
இதுதொடர்பாக, இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தின் ஆய்வாளர் வசந்த குமார் ஸ்வர்ணாகர் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:

தாஜ்மகாலை இரவு நேரத்தில் சென்று பார்வையிட வசதியாக ஆகஸ்டு 21, 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

வழக்கமாக, வெள்ளிக்கிழமைகளில் தாஜ்மகால் மூடப்படும். ஊரடங்கை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (22-ம் தேதி) மீண்டும் மூடப்படுகிறது. இதன்படி, இரவு 8:30-9:00, 9:00-9:30, 9:30-10:00 ஆகிய நேரங்களில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். 

இதற்காக ஆக்ராவில் உள்ள இந்திய தொல்பொருள் ஆய்வு மைய அலுவலகத்தில் சுற்றுலாவாசிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

எனினும், சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலின்படி ஒரு நேரத்தில் 50 சுற்றுலாவாசிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

Exit mobile version