இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 4 கலை, அறிவியல் கல்லூரிகளில் நடப்பு ஆண்டில் மாணவர் சேர்க்கை- உயர் கல்வித்துறை அரசாணை வெளியீடு.
சென்னை கொளத்தூரில் ஸ்ரீ கபாலீசுவரர் கலை, அறிவியல் கல்லூரி.
திருச்செங்கோட்டில் அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கலை, அறிவியல் கல்லூரி.
ஒட்டன்சத்திரத்தில் பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரி.
விளாத்திகுளத்தில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கலை, அறிவியல் கல்லூரி.
4 கல்லூரிகளில் தற்காலிகமாக தனியார் மற்றும் திருக்கோயில்களுக்கு சொந்தமான இடத்தில் செயல்பட அனுமதி.
4 கல்லூரிகளிலும் BCA, B.Com., BBA., B.Sc., ( Computer Science ) என்று 4 பாடப்பிரிவுகளில் உடனடி மாணவர் சேர்க்கைக்கு அனுமதி.
4 கல்லூரிகளும் சுயநிதி கல்லூரிகளாகவே செயல்படும்.
தடையில்லா சான்று, கூட்டு நிலை வைப்புத்தொகை செலுத்துவது உள்ளிட்டவற்றில் இருந்து விலக்களித்து உயர் கல்வித்துறை உத்தரவு.
