இந்திய எல்லைக்கோடு அருகே சீனா ராணுவத்தை குவித்து வருவதால் பதற்றம் நிலவி வருகிறது. ஏற்கெனவே அருணாச்சல பிரதேசத்திற்கு உரிமை கொண்டாடும் சீனா எல்லையில் அவ்வப்போது தாக்குதலும் நடத்தி வருகிறது.
இந்நிலையில், இந்திய எல்லைக்கோடு அருகே சீனா துருப்புகளை குவித்து வருவதாகவும், சாலை, சேமிப்பு கிடங்குகள், சுரங்கங்கள், ஹெலிபேடுகளை அமைத்து வருவதாகவும் அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன் தகவல் தெரிவித்துள்ளது

