Home Uncategorized சீறி பாய்ந்த ராக்கெட்! விண்வெளி பயணத்தை தொடங்கிய சுபன்ஷு சுக்லா! பெருமை சேர்த்த இந்தியர்!

சீறி பாய்ந்த ராக்கெட்! விண்வெளி பயணத்தை தொடங்கிய சுபன்ஷு சுக்லா! பெருமை சேர்த்த இந்தியர்!

திட்டமிட்டபடி, இன்று நண்பகல் 12.01 மணிக்கு புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸின் பால்கன் 9 ராக்கெட் மூலமாக டிராகன் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. பால்கன் 9 ராக்கெட்டில் இருந்து வெற்றிகரமாக பிரிந்த முதல்கட்ட எஞ்சின், பூமிக்கே திரும்பியது. புவிவட்டப்பாதைக்குள் நுழைந்த பால்கன் ராக்கெட், புறப்பட்ட 8 நிமிடங்களில் முதல் கட்டத்தை கடந்தது. நாளை மாலை 4.30 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தை விண்கலம் சென்றடையும். 4 வீரர்களும் 14 நாட்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து ஆய்வு செய்யவுள்ளனர்.

Shubhanshu sukla

இந்த பயணத்தின்போது 60 விதமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் மூலம் 41 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளி செல்லும் இந்தியர் என்ற சாதனையை சுபான்ஷு சுக்லா படைக்க உள்ளார்.சுபான்ஷு சுக்லாவின் குடும்பத்தினர் உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்தபடி திரையில் கண்டு நெகிழ்ச்சி அடைந்தனர். 1984ல் விண்வெளி நிலையத்துக்கு சென்ற ரஷ்யாவின் சோயுஸ் விண்கலத்தில் இந்தியரான ராகேஷ் சர்மா பயணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version