Saturday, July 18, 2026
Homeசெய்திகள்இந்தியாவின் முதல் தனியார் ஆர்பிட்டல் ராக்கெட் 'விக்ரம்-1' இன்று வரலாற்று சிறப்புமிக்க விண்ணேற்றம்!

இந்தியாவின் முதல் தனியார் ஆர்பிட்டல் ராக்கெட் ‘விக்ரம்-1’ இன்று வரலாற்று சிறப்புமிக்க விண்ணேற்றம்!

இந்தியாவின் முதல் தனியார் ஆர்பிட்டல் ராக்கெட் ஏவுதல் இந்திய விண்வெளித்துறையில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாக, நாட்டின் முதல் தனியார் ஆர்பிட்டல் (புவி சுற்றுப்பாதை) ராக்கெட்டான ‘விக்ரம்-1’ (Vikram-1) இன்று (ஜூலை 18) காலை 11.30 மணிக்கு விண்ணில் பாய்கிறது.

ஹைதராபாத்தைச் சேர்ந்த விண்வெளி தொழில்நுட்பத் தொடக்க நிறுவனமான ‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்’ (Skyroot Aerospace) முற்றிலும் உள்நாட்டிலேயே இந்த ராக்கெட்டை வடிவமைத்துத் தயாரித்துள்ளது. ‘மிஷன் ஆகமன்’ (Mission Aagaman – வருகை) என்ற பெயரிடப்பட்டுள்ள இந்தச் சோதனைப் பயணமானது, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதலாவது ஏவுதளத்திலிருந்து ஏவப்படத் தயாராக உள்ளது.

இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை டாக்டர் விக்ரம் சாராபாயின் நினைவாகப் பெயரிடப்பட்டுள்ள இந்த ராக்கெட், ஏழு அடுக்கு மாடி உயரத்தைக் கொண்டதுடன், முழுமையாகக் கார்பன் கலவைப் பொருட்களாலும், 3D அச்சிடப்பட்ட என்ஜின்களாலும் கட்டமைக்கப்பட்டுள்ளது.

குறைந்த புவி சுற்றுப்பாதையில் (LEO) சுமார் 350 கிலோ வரை எடையுள்ள சிறிய செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தும் திறன் கொண்ட விக்ரம்-1 ராக்கெட், தனது முதல் பயணத்தில் பல்வேறு நிறுவனங்களின் தொழில்நுட்ப ஆய்வுப் பொருட்கள் மற்றும் கலைப்படைப்புகளைச் சுமந்து கொண்டு விண்வெளிக்குச் செல்கிறது.

அரசால் உருவாக்கப்பட்ட ஏவுகளங்களைச் சாராமல், இந்தியத் தனியார் நிறுவனம் ஒன்று தனது சொந்த முயற்சியில் செயற்கைக்கோள்களைப் புவி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த மேற்கொள்ளும் இந்த முதல் முயற்சி, உலக அளவில் இந்தியாவின் வணிக விண்வெளிச் சந்தையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments