Saturday, March 14, 2026
HomeUncategorizedஎழுத்தாளர் இந்திரா செளந்திரராஜனின் படத்திறப்பு மற்றும் புகழஞ்சலி விழா - நடிகர் சிவக்குமார் உள்ளிட்ட...

எழுத்தாளர் இந்திரா செளந்திரராஜனின் படத்திறப்பு மற்றும் புகழஞ்சலி விழா – நடிகர் சிவக்குமார் உள்ளிட்ட ஏராளமான பிரமுகர்கள் பங்கேற்பு

எழுத்தாளர் இந்திரா செளந்திரராஜன் மறைவையொட்டி, அவர் நினைவை போற்றும் வகையில் ஒரு புகழஞ்சலியும், படத்திறப்பு விழாவும் சென்னை மயிலாப்பூர் ஆர்கே கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் நடிகர் சிவக்குமார்,அபிராமி ராமநாதன், ‘அம்மா கிரியேஷன்ஸ்’ சிவா, காலச்சக்கரம் நரசிம்மா, மை.பா. நாராயணன், பட்டுக்கோட்டை பிரபாகர், தேவி பாலா உள்ளிட்ட ஏராளமான திரையுலகைச் சார்ந்தோரும், இலக்கிய அமைப்பைச் சேர்ந்தவர்களும், கதாசிரியர்களும் பங்கேற்று அவரை நினைவு கூர்ந்தனர். 

மேலும், இந்நிகழ்ச்சியில் இந்திரா சௌந்திரராஜன் குறித்து ஒரு மலர் வெளியிடப்பட்டது. அதனை அபிராமி ராமநாதன் வெளியிட நடிகர் சிவக்குமார் பெற்றுக்கொண்டார். ஓவியர் ஷ்யாம் வரைந்த இந்திரா சௌந்தர்ராஜன் உருவப்படம் அவரது குடும்பத்தாருக்கு வழங்கப்பட்டது.

அவரை பற்றிய சுவாரசியமான தகவல்கள் இயக்குநர் நாகா, இயக்குநர் பத்ரி உள்ளிட்ட பலரும் பகிர்ந்து கொண்டனர்.  இதில், இந்திராசௌந்தர்ராஜன் அவர்களின் நினைவலைகளைத் தரும் மனதை நெகிழ வைக்கும் காணொலி திரையிடப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை இயக்குநர் நித்தியானந்தம்,  திரு. ஹரி,  திரு. பரணி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments