Thursday, June 25, 2026
Homeசெய்திகள்இந்திய காவல்துறையின் எதிர்காலம்.. டெல்லியில் குவியும் அதிநவீன தொழில்நுட்பங்கள்!

இந்திய காவல்துறையின் எதிர்காலம்.. டெல்லியில் குவியும் அதிநவீன தொழில்நுட்பங்கள்!

புதுடெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் (Bharat Mandapam) நடைபெற்று வரும் 2026 சர்வதேச காவல் கண்காட்சியானது (International Police Expo 2026), நவீன காலக் குற்றத் தடுப்பு மற்றும் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் அதிநவீனத் தொழில்நுட்பங்களின் எதிர்கால முகவரியாகக் காட்சியளிக்கிறது.

‘நாட்டின் சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பின் எதிர்காலம்’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு நடக்கும் இக்கண்காட்சியில், புலனாய்வுத் துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் அதிநவீன சர்வர்கள் மற்றும் கணினிகள் பொருத்தப்பட்ட ‘டிஜிட்டல் தடயவியல் வாகனம்’ (Forensic Digital Van) பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது; இது புலனாய்வு அதிகாரிகள் குற்ற இடத்திலேயே டிஜிட்டல் சான்றுகளைத் தரவுப் பாதுகாப்புடன் உடனுக்குடன் ஆய்வு செய்ய வழிவகை செய்கிறது.

இவற்றுடன், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன ஸ்னைப்பர் (Sniper) மற்றும் அஸ்ஸால்ட் (Assault) ரகத் துப்பாக்கிகளும் இங்குக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், தேசியப் பாதுகாப்புப் படை (NSG) உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்புப் படையினர் இவற்றின் செயல் திறன்களை மிகத் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும், பாதுகாப்புச் சோதனைகளின் போது ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்கும் வகையில், சீலிடப்பட்ட கன்டெய்னர்கள் அல்லது பெட்டிகளைத் திறக்காமலேயே அதற்குள் இருக்கும் ரசாயனங்கள், வெடிபொருட்கள் மற்றும் போதைப்பொருட்களை மிகத் துல்லியமாகக் கண்டறியும் புதிய அதிநவீனத் தொழில்நுட்பக் கருவியும் இக்கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, ஒட்டுமொத்தக் காவல் துறையையும் நவீனமயமாக்குவதில் இந்தியாவின் வளர்ந்து வரும் தொழில்நுட்பத் திறனை சர்வதேச அரங்கில் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments