திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் இருந்து கேரளாவுக்கு காய்கறிகள், கனிம வளங்கள், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனுப்பப்படுகின்றன.
பதிலுக்கு கேரளாவிலிருந்து இந்த மாவட்டங்களுக்கு லாரி, லாரியாக இறைச்சி , மருத்துவக் கழிவுகளை மூட்டைகளில் கொண்டு வந்து கொட்டப்படுகிறது.
சரக்குகளை இறக்கி விட்டு திரும்பும் டிரைவர்களுக்கு கொடுக்கப்படும் பணம் இந்த கொடூரத்தை செய்ய உதவுகிறது.
சொற்ப பணத்துக்கு ஆசைப்பட்டு இந்த அபாயத்தை சொந்த மாவட்டத்திற்கு கொண்டு வரும் சில டிரைவர்களால் இது தொடர்ந்து கொண்டிருக்கிறது.
நெல்லை சீதபற்ப நல்லுார் அருகே நடுக்கல்லுார் பகுதியில் ஒரு குளம் முழுதும் நுாற்றுக்கணக்கான மூட்டைகளில் நேற்று முன்தினம் நள்ளிரவில் கொட்டப்பட்ட கேரள புற்றுநோய் மைய மருத்துவ கழிவுகள் குவிந்து கிடக்கின்றன.
