விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் இரட்டைப் பிள்ளையார்:
சில கோயில்களில் இரட்டைப் பிள்ளையாரை பார்க்க முடியும்.
விநாயகர் முழுமுதற் கடவுள் என்பதால் சிவன் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களும் அவரை வணங்கிய பிறகே எந்த காரியத்தையும் தொடங்குவார்கள் என்பது பொது விதி.
விநாயகரே ஒரு காரியத்தை தொடங்க வேண்டும் என்றாலும் கூட தன் அருகில் மற்றொரு விநாயகரைப் படைத்து வணங்கியபிறகே செயலைத் தொடங்க வேண்டும் என்பதற்காக இரட்டைப் பிள்ளையார் சன்னதிகள் சில கோயில்களில் அமைக்கப்பட்டுள்ளன.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் இரட்டை விநாயகரைப் பார்க்கலாம். மகாபாரதத்தை விநாயகர் எழுதத் துவங்கும் போது தன்னைத்தானே வணங்கி எழுதத் துவங்கினார் என்றும் சொல்வதுண்டு.
இரட்டைப் பிள்ளையார் காப்பு !
சித்புருஷர்கள் அருளியுள்ள இரட்டைப் பிள்ளையார் நட்சத்திரக் காப்பினை அனைவரும் தினந்தோறும் ஓதி விநாயகப் பெருமானின் திருவருளை பெற வேண்டுகிறோம்.
ஒவ்வொரு நட்சத்திரத்திற்குமான நட்சத்திரக் காப்பு திரட்டு வருமாறு:
அசுவினி :
வருவன கண்டேன் வளர்மதி திருஅஸ்வினி அருள் பூண்டு இருவினை களையும் இரட்டைக் கணபதி பாதக் காப்பே!
பரணி:
திருஅருள் புரியும் தீச்சுடர் பரணி அருள் பூண்டு குரு அருள் பூண பூரண இரட்டைக் கணபதி பாதக் காப்பே!
கார்த்திகை:
ஸ்ரீபிள்ளையார் மூர்த்திகள் பழமண்ணிப்படிக்கரை யாதும் பெருமையுற கீர்த்தி கிருத்திகை அருள்பூண்டு ஏதுசெய்யினும் நலமே விளையும் இரட்டைக் கணபதி பாதக் காப்பே !
ரோகிணி:
மாதர் பிழை களைய மனமிரங்கும் ரோகினி அருள் பூண்டு வேதம் ஓதுவோர் துணையாகும் இரட்டைக் கணபதி பாதக் காப்பே! மிர்கசீரிஷம்: மலை அருவி எனப் புகழ் சிதறும் மிருகசீருஷ அருள் பூண்டு மனைவி துயர் நெருங்காது அருள் புரியும் இரட்டைக் கணபதி பாதக் காப்பே!
திருவாதிரை:
வாழியெம் போற்றி என்றேத்தும் வளம்பெரு ஆதிரை அருள் பூண்டு ஆழி முதல்வனாகி நின்ற இரட்டைக் கணபதி பாதக் காப்பே!
புனர்பூசம்:
புகழ் மாலை சூட்டியெனைப் புனிதனாக்கி புனர்பூச அருள் பூண்டு திகழ்கின்ற திடசித்தி அருள்கின்ற இரட்டைக் கணபதி பாதக் காப்பே!
பூசம்:
குளிர்ந்து வரும் குருவருள் பூண்ட பூசத்து அருள் பூண்டு தளர்ந்த வினை சேராதிருக்க இரட்டைக் கணபதி பாதக் காப்பே!
ஆயில்யம்:
ஏந்திழையாளொடு மதி ஆயில்ய சகிதமாகி கை ஏந்தி நிற்கும் நிலையிலா அருள் பூண இரட்டைக் கணபதி பாதக் காப்பே!
மகம்:
தர்ம திருவருள் மாதேவி மகத் திருவருளால் கர்மத் தொல்லை தீர உடனிருக்கும் இரட்டைக் கணபதி பாதக் காப்பே!
பூரம்:
பன்மலர் தூவிப் பாடி மகிழ்ந்து பூரம் அருள் பூண்டு இன்முகம் சுமந்து வாழ இரட்டைக் கணபதி பாதக் காப்பே!
உத்திரம்:
சிந்தையிலே சீர் பெறும் உத்திர அருள் பூண்டு கந்தலாடைக்கு ஆளாக்காத இரட்டைக் கணபதி பாதக் காப்பே!
அஸ்தம்:
அஸ்த மெல்லியலாளொடு சசிதர அருள் பூண்டு அஸ்தர அம்பென வார்த்தைகளால் துன்புறாது இரட்டைக் கணபதி பாதக் காப்பே!
சித்திரை:
சொல்லும் செயலும் சித்திரையால் சிவமே பூண்டு அல்லும் பகலும் அரனருள் பெற இரட்டைக் கணபதி பாதக் காப்பே!
சுவாதி:
திங்கள் உடனுறை சுவாதித் திருவருள் பூண்டு எங்கும் எதிலும் வெற்றியுற இரட்டைக் கணபதி பாதக் காப்பே!
விசாகம்:
திசைதிசை தொழுது விசாகத் திருவருள் பூண்டு இசைபட வாழ்ந்திடவே இரட்டைக் கணபதி பாதக் காப்பே!
அனுஷம்:
பொடிதனைப் பூச வைத்த புனித அனுஷ அருள் பூண்டு வடிவு பொங்கும் வாழ்வுற இரட்டைக் கணபதி பாதக் காப்பே!
கேட்டை:
தொழும் தொண்டர் கேட்டைத் திருவருள் பூண்டு மழுவும் மானும் பூண்டவர் அருள் பெற இரட்டைக் கணபதி பாதக் காப்பே!
மூலம்:
வண்டுசேர் குழலினாளை மூல அருளைப் பூண்டு கண்டு சேர் மணாளன் உடனுறைய இரட்டைக் கணபதி பாதக் காப்பே!
பூராடம்:
அண்ட வானவர்கள் ஏத்தும் பூராடத் திருவருளால் தொண்டர்கள் தொழுதேத்த இரட்டைக் கணபதி பாதக் காப்பே!
உத்திராடம்:
வல்வினை விரைந்தோட உத்திராடத் திருவருள் பூண்டு இல்வினை இனிதுற நடத்த இரட்டைக் கணபதி பாதக் காப்பே!
திருஓணம்:
சங்கணி குழையும் பூண்டு திருவோணத் திருவருள் கூட்டி இங்கணியும் சிறப்பெல்லாம் குறையுறாதிருக்க இரட்டைக் கணபதி பாதக் காப்பே!
அவிட்டம்:
கடுவினையும் களைந்தருளும் அவிட்டத் திருஅருள் பூண்டு சுடுவினை தாக்காதிருக்க இரட்டைக் கணபதி பாதக் காப்பே!
சத்யம்:
பக்தர்க்கருளும் பாச நிறை சதயத்தருளால் சித்தர் அருள் பெற இரட்டைக் கணபதி பாதக் காப்பே!
பூரட்டாதி:
முக்தி நிலை அருள்கின்ற பூரட்டாதி அருள் பூண்டு சக்தி நிலை பெற வைத்திட இரட்டைக் கணபதி பாதக் காப்பே!
உத்திரட்டாதி:
உருகும் மனமுடையோர் உத்திரட்டாதி அருள் பூண்டு பருகி வாழ்வாங்கு வாழ இரட்டைக் கணபதி பாதக் காப்பே! ரேவதி: ஹரஹர சிவ என்பார் மனதில் புகுந்து ரேவதி கரங் கொடுத்துதவ இரட்டைக் கணபதி பாதக் காப்பே
