Friday, March 13, 2026
HomeUncategorized‘இறுகப்பற்று’ படத்தின் பிரஸ்மீட்

‘இறுகப்பற்று’ படத்தின் பிரஸ்மீட்

வெவ்வேறு விதமான கதைக் களங்களைச் சொல்வதிலும், படைப்பாற்றலின் எல்லைகளை விரிவாக்குவதிலும் பெயர் பெற்ற தயாரிப்பு நிறுவனம் பொடன்ஷியல் ஸ்டூடியோஸ். ‘மாயா’, ‘மாநகரம்’, ‘மான்ஸ்டர்’ மற்றும் ‘டாணாக்காரன்’ போன்ற படங்களின் மூலம் இந்திய சினிமாவுக்குத் தரமானத் திரைப்படங்களைத் தருவதில் தொடர்ந்து தங்களின் பங்கைச் சிறப்பாக செய்து வருகிறது. 

தற்போது பொடன்ஷியல் ஸ்டூடியோஸின் அடுத்தத் தயாரிப்பான ‘இறுகப்பற்று’ வரும் ஃப்ரை டே ரிலீசாகப் போகுது!எலி, தெனாலிராமன் உள்ளிட்ட படங்களை இயக்கிய யுவராஜ் தயாளன் இப்படத்தை டைரர். விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த், ஸ்ரீ, அபர்நதி, சானியா ஐயப்பன் ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் திறம்பட நடித்துள்ளனர்.

மனித உறவுகளின் சிக்கலான தன்மைகளைப் பற்றி பேசும் இந்த படம், ஜஸ்டின் பிரபாகரனின் ஆன்மாவைத் தொடும் இசையையும், கார்த்திக் நேதாவின் கவிதையான வரிகளையும் கொண்டுள்ளது. கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்கிறார், ஜேவி மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். கலை இயக்குநர் சக்தி வெங்கட்ராஜ், ஆடை வடிவமைப்பாளர்கள் பூர்ணிமா ராமசாமி, ஏகன் ஏகாம்பரநாதர் உள்ளிட்டோர் தொழில்நுட்பக் குழுவில் உள்ளனர்.

படத்தைப் பற்றி புரொடக்‌ஷன் டீமிடம் கேட்டப் போது, “நாங்கள் மீண்டும் ஒரு தனித்துவமான திரைப்படத்துடன் வருகிறோம், இது உணர்ச்சிகரமான, அழுத்தமான படைப்பாக இருக்கும். இயக்குநர் யுவராஜின் திரைக்கதை நிச்சயமாக பார்வையாளர்களுக்கு, குறிப்பாக ஜோடிகளுக்கு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்” அப்ப்டீன்னு சொன்னாய்ங்க 

டைரக்டகிட்டே பேச்சுக் கொடுத்த போது “கடந்த சில வருஷங்களா நிறைய விவாகரத்துகள், கணவன் மனைவி பிரிவுகள் நடந்துட்டு இருக்கு. முந்தையகாலகட்டங்கள்ல எங்கயோ, எப்பவோ கேள்விப்படற ‘டைவர்ஸ்’ இன்னைக்கு சர்வசாதாரணமா நடக்குது. ஏன் இப்படி நடக்குதுன்னு யோசிக்க ஆரம்பிச்சதுதான், ‘இறுகப்பற்று’ உருவாக காரணம். கல்யாணத்துக்கு பிறகு நடக்கிற பிரச்சினைகளை இந்த படம் பேசும்” அப்படீன்னார் யுவராஜ் தயாளன். கூடவே இறுகப்பற்று’ – ஏன் இந்த தலைப்பு?-ன்னு கேக்கறாய்ங்க -‘ஒன்றாக இருங்க’ன்னு சொல்லி இருக்கேன். பற்றுதலோடு இருங்கன்னும் எடுத்துக்கலாம். இப்ப ஹாரர், டார்க் காமெடி, த்ரில்லர் படங்கள் அதிகமா வந்திட்டிருக்கிற மாதிரி, குடும்பகதைகளுக்கான ஓர் இடத்தை, ‘இறுகப்பற்று’ படம் ரிலீஸுக்கு பிறகு கொண்டு வரும்னு நம்பறேன். டைரக்டர் தியாகராஜா குமாரராஜா ஒரு பேட்டியில, ‘ஒரு நல்ல கதையை தயாரிப்பாளர் நிராகரிச்சார். ஏன்னு கேட்டதும் இந்த மாதிரி படங்கள் வந்ததில்லை, அதனாலதான்’னு சொன்னதாக சொல்லியிருந்தார். இந்த படமும் அப்படிப்பட்ட ஜானர்தான். ஆன எப்பவும் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த கதையை எப்படி எடுத்துப்பாங்கன்னு தெரியாமதான் போய் சொன்னேன். ஆனா, அவங்க இதை பண்ணலாம்னு சொன்னாங்க. அதுவே நல்ல விஷயமா எனக்குத் தோணுச்சு

இப்படத்தின் புரொமோஷனுக்காக திருமணமான தம்பதிகளுக்கிடையேயான புரிதலை  தெரிந்து கொள்ள,  ஒரு சுவாரஸ்யமான நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர். அதுவே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிச்சுடுச்சு

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments