Friday, August 7, 2026
Homeசுற்றுலா10 நாட்கள் ஜப்பான் சுற்றுலா... ஐஆர்சிடிசி (IRCTC)அறிவித்த புதிய சிறப்பு தொகுப்பு!

10 நாட்கள் ஜப்பான் சுற்றுலா… ஐஆர்சிடிசி (IRCTC)அறிவித்த புதிய சிறப்பு தொகுப்பு!

இந்திய இரயில்வேயின் சுற்றுலா பிரிவான ஐஆர்சிடிசி (IRCTC), டெல்லியிலிருந்து புறப்படும் வகையிலான 10 நாட்கள் கொண்ட சிறப்பு ஜப்பான் சுற்றுலாத் தொகுப்பை (Japan Tour Package) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

‘மெஸ்மரைசிங் ஜப்பான்’ (Mesmerizing Japan) என்ற பெயரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தச் சுற்றுலாவில், டோக்கியோ, ஒசாகா, கியோட்டோ, ஹிரோஷிமா மற்றும் நாரா ஆகிய புகழ்பெற்ற வரலாற்று மற்றும் சுற்றுலா நகரங்களை நேரில் கண்டு ரசிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

பயணிகளுக்கு விமானக் கட்டணம், நட்சத்திர ஹோட்டல் தங்குமிடம், சுவையான உணவுகள், உள்நாட்டுப் போக்குவரத்து, பார்வையிடும் இடங்களுக்கான அனுமதிச் சீட்டுகள் மற்றும் சுற்றுலா வழிகாட்டி வசதிகள் என அனைத்துமே ஒருங்கிணைத்து வழங்கப்படுகின்றன. இந்த 10 நாட்கள் சுற்றுலாவுக்கான கட்டணம் நபர் ஒருவருக்கு ரூ. 3.46 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.

இந்தியப் பயணிகளிடையே சர்வதேச சுற்றுலா குறித்த ஆர்வம் அதிகரித்து வரும் நிலையில், ஜப்பானின் கலாச்சாரம், இயற்கை அழகு மற்றும் நவீன தொழில்நுட்ப விநோதங்களை பாதுகாப்பாகவும் சொகுசாகவும் அனுபவிக்க விரும்பும் பயணிகளுக்கு ஐஆர்சிடிசியின் இந்தச் சிறப்புத் தொகுப்பு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments