Home Uncategorized ஈஷா யோகா மையத்தில் மஹா சிவராத்திரி- கோலாகலத்தில் மக்கள் கூட்டம்

ஈஷா யோகா மையத்தில் மஹா சிவராத்திரி- கோலாகலத்தில் மக்கள் கூட்டம்

கோவை ஈஷா யோக மையத்தில் மஹா சிவராத்திரி  விழா நேற்று விடிய விடிய நடைபெற்றது. இதில், ஏராளமானோர் பங்கேற்றனர்.
கோவை வெள்ளியங்கிரி மலையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் 112 அடி ஆதியோகி சிலை முன் சிவராத்திரி விழா தியாணலிங்கத்தில் பஞ்சபூத ஆராதனை, லிங்க பைரவி தேவி மஹா யாத்திரை மற்றும் தியான நிகழ்ச்சியுடன் இவ்விழா தொடங்கியது.

அப்போது பேசிய சத்குரு, இரு நாடுகளுக்கும் இடையே நடைபெறும் போர், குற்றம் மற்றும் பகை உணர்வால் நடக்கவில்லை என்றும், அஞ்ஞானத்தில் பாதிப்புகளை சந்திப்பதாகவும் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து ஈஷாவின் சவுண்ட்ஸ் ஆப் ஈஷா மற்றும் ஈஷா சமஸ்கிருதி குழுவினர் சங்களின் இசை நடன நிகழ்ச்சிகளை அரங்கேற்றினர்.

இந்நிகழ்ச்சியில் தமிழகம் மற்றும் பிற மாநில இசைக்கலைஞர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் மேலும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். 

இந்தக் கொண்டாட்டத்தின் புகைப்படத் தொகுப்பு காண்க…

Exit mobile version