Home Uncategorized இத்தாலி புறப்பட்டு சென்றார் மோடி

இத்தாலி புறப்பட்டு சென்றார் மோடி

மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள மோடி, தன் முதல் வெளிநாட்டு பயணமாக நேற்று இத்தாலி புறப்பட்டு சென்றார். இன்று நடக்கும் ஜி – 7 கூட்டத்தில் பிரதமர் பங்கேற்று பேசுகிறார்.

இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கை:

இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி அழைப்பின் பேரில் இன்று இத்தாலியில் நடக்கும் ஜி – 7 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறேன். கடந்த ஆண்டில் இத்தாலி பிரதமர் மெலோனி இருமுறை இந்தியா வந்திருந்தார். அந்த பயணம் இரு தரப்பு நாடுகளின் திட்டங்களை வேகப்படுத்தின. இந்தியா- – இத்தாலியின் உறவை பலப்படுத்துவதிலும், இந்தோ- – -பசிபிக் மற்றும் மத்திய தரைக்கடல் பகுதிகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதிலும் நாங்கள் உறுதியாக உள்ளோம். உச்சி மாநாட்டில் பங்கேற்கும் மற்ற தலைவர்களையும் சந்திக்க ஆவலுடன் உள்ளேன்.

ஜி – 7 மாநாட்டின் கலந்துரையாடலின் போது, செயற்கை நுண்ணறிவு, எரிசக்தி, ஆப்ரிக்கா மற்றும் மத்திய தரைக்கடல் விவகாரங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும்.

Exit mobile version