Home Uncategorized ஜோதிகா, சசிகுமார் இணைந்து நடிக்கும் ‘உடன்பிறப்பு ‘

ஜோதிகா, சசிகுமார் இணைந்து நடிக்கும் ‘உடன்பிறப்பு ‘

ஜோதிகா, சசிகுமார், சமுத்திரக்கனி நடிப்பில், இரா. சரவணன் இயக்கத்தில் தயாராகும் ‘உடன்பிறப்பு ‘ திரைப்படம் வருகிற அக்டோபர்  மாதம் அமேசான் பிரைமில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில்  சூரி, கலையரசன், நிவேதிதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  படத்தின் படப்பிடிப்பு தஞ்சாவூரில் தொடங்கப்பட்டது நிறைவடைந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணியில் உள்ளனர் படக்குழு. படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். இது ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள 50-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இப்படம் குறித்து பதிவிட்ட நடிகர் சூர்யா, உடன்பிறப்பின் அன்பு, உணர்ச்சிகள் குறித்த மிக ஆழமான ஒரு திரைப்படம் என தெரிவித்திருந்தார். இப்படத்தின் போஸ்டரில் நடிகை ஜோதிகா கிராமத்து பெண்மணி வேடத்தில் சரியாக பொருந்தி இருந்தார். மறுபுறம் சசிகுமாரும் கிராமத்து கெட்டப்பில் இருந்தார்.

Exit mobile version