Home Uncategorized ஜோதிடர் பாலாஜி ஹாசன் கணிப்பு இது…

ஜோதிடர் பாலாஜி ஹாசன் கணிப்பு இது…

எதிர்க்கட்சித் தலைவர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிமுக கட்சியின் தலைவராக வருவதற்கு அதிக வாய்ப்பு ..  நாளை  ( 21.06.2022 ) காலை 11.10  Am to 11.40 Am வரை  சிம்ம லக்னம்.. லக்கனாதி பதி லாப ஸ்தானத்தில்., லக்கனத்திற்கு சனிபகவான் ஏழில் திக் பலம் அடைந்து மூலத்திரிகோண ஆட்சி பெறுகிறார்

லக்கினத்திற்கு எட்டில் 9-க்குடையவர் 4 க்கு உடையவர் எட்டில் ஒரு கிரகம் பலமாக இருப்பது மிகுந்த நன்மை தரக்கூடிய நேரம்.,

சூரியன் – தலைமை பொறுப்பை தாங்கும் சக்தி படைக்கக் கூடிய கிரகம்

சனி – பொதுமக்கள் , கட்சி ரீதியில் பார்த்தால் அடிப்படை உறுப்பினர்கள்

சனி திக்பலம் கொன்ற லக்கனத்தில் ஒரு தலைவர் பொறுப்பை ஏற்றார் நாளடைவில் அந்த தலைவருக்கு ஏகமனதாக தொண்டர்கள் ஆதரவு தருவார்கள்

சனி வக்ரம் , வக்ர கிரகம் பார்வை பெற்ற லக்கனத்தில் ஒரு செயல் தொடங்கும் போது அந்தச் செயலை விடாப்பிடியாக பிடிவாதமாக முடிக்கக் கூடிய திறன் ஏற்படும் எந்த சூழ்நிலையிலும் பின்வாங்கல் நடக்காது.

நாளை 60க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் ஒரு கட்சியின் சார்பாக , அவருக்கு சாதகமாக தீர்மானம் இந்த நேரத்தில் போடப்பட்டால் உறுதியாக அந்த தீர்மானத்தின் பலனாக சம்பந்தப்பட்டவருக்கு அனேக நற்பலன்கள் கிடைக்கும்.,

இதுவரை புகழ்பெற்ற அந்தக் கட்சியில்  
பொன்மனச் செம்மல்,
அம்மா என்ற அடைமொழிக்கு சொந்தக்காரர் என்ற வரிசையில் அந்த இடத்தை  அடுத்ததாக உறுதி செய்வதற்கான வாய்ப்புகள் உண்டு.

Exit mobile version