Home Uncategorized முக கவசம் கட்டாயம்

முக கவசம் கட்டாயம்

பெரிய வணிக வளாகங்களில் குளிர் சாதனம் பயன்படுத்த தடை 

வேலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கையினை மேற்கொள்ள கீழ்கண்ட வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் குமாரவேல் பாண்டியன்
அறிவிப்பு

முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பொதுஇடங்களில் இரு நபர்களுக்கிடையே 6அடி தூரம் இடைவெளி விட்டு
நிற்கவேண்டும்.

அனைத்து வணிக விற்பனை கூடங்கள் மற்றும் உணவகங்களில் கை சுத்தம்
செய்தல் கட்டாயமாக்கப்படுகிறது / நுழைவு வாயிலில் கைகளை சுத்தம் செய்திடும் கிருமிநாசினி (Hand Sanitizer) வைக்கப்படவேண்டும்.

பெரிய வணிக வளாகங்களில் குளிர்சாதன உபகரணம் (A.C.) பயன்படுத்த தடைவிதிக்கப்படுகிறது.

திருமண மண்டபங்களில் பொதுமக்களின் எண்ணிக்கை 100 நபர்கள் இருப்பதை உறுதி செய்திடல்வேண்டும்.

இறப்பு வீடுகளில் 50 நபர்களுக்கு மேல் இருத்தல் கூடாது. அனைவரும் முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகள் கட்டாயமாக
போட்டுக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. அடிக்கடி கைகளை சுத்தம் செய்வதால் கொரோனா நோய்தொற்று ஏற்படு வதிலிருந்து
காத்துக்கொள்ளலாம் என்பதை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த
அறிவுறுத்தப்படுகிறது.

கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவமனைகளில் உள்ள மருத்துவரை அணுகிடுமாறு தெரிவிக்கப்படுகிறது (காய்ச்சல்,தொண்டை வலி. நாவில் ருசி தெரியாமல் இருந்தால்).

Exit mobile version