அச்சு மை, எழுத்து மை, ஓவியம் வரைவதற்கான மை – 18%
கட்டிங் பிளேடுகள் கொண்ட கத்திகள், காகிதக் கத்திகள், பென்சில் ஷார்பனர்கள் மற்றும் பிளேடுகள், ஸ்பூன், முட்கரண்டி, கரண்டி, ஜல்லிக் கரண்டி, கேக் சர்வர்கள் பேக்கரி பொருட்களுக்கு – 18%
நீர் இறைக்கும் பம்புகள், ஆழ்துளை கிணற்றுக்கான டர்பைன் பம்புகள், நீர் மூழ்கி பம்புகள், சைக்கிள் பம்புகள் – 18%
விதைகள், பருப்பு வகைகளை சுத்தப்படுத்த, தரம் பிரிக்க பயன்படும் இயந்திரங்கள், அரைவை தொழில் அல்லது தானியங்களுக்காக பயன்படும் இயந்திரங்கள், வெட் கிரைண்டர்கள் – 18%
எல்.இ.டி., பல்புகள், விளக்குகள் மற்றும் அதனை பொருத்தும் பொருட்கள், சர்க்யூட் போர்டுகள் – 18%
வரைய மற்றும் குறிப்பதற்கு பயன்படும் கருவிகள் – 18%
காசோலைகள் – 18%
சாலைகள், பாலங்கள், ரயில்வே, மெட்ரோ, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், சுடுகாடு போன்ற பணிகளுக்கான ஒப்பந்தங்களுக்கு – 18%
மத்திய, மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரலாற்று நினைவுச் சின்னங்கள், கால்வாய்கள், அணைகள், பைப்லைன்கள், நீர் விநியோக ஆலைகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் போன்ற ஒப்பந்த பணிகள் மற்றும் துணை ஒப்பந்த பணிகளை செய்து வழங்க – 18%
மத்திய, மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் உள்ளாட்சிகளுக்கு செய்து தரப்படும் நில வேலை ஒப்பந்தங்களுக்கு – 12%
சோலார் வாட்டர் ஹீட்டர்களுக்கு – 12%
தயாரிக்கப்பட்ட தோல் பொருட்கள், ஷாம்வா தோல், காம்போசிஷன் லெதர் – 12%
வரைபடங்கள், ஹைட்ரோகிராபிக் அல்லது அந்த வகையான அனைத்து சார்ட்கள், அட்லஸ், குளோப்கள், சுவர் மேப்களுக்கு – 12%
நாளொன்றுக்கு 1000 ரூபாய் வரை கட்டணம் விதிக்கும் ஓட்டல் அறைகளுக்கு – 12%
ஐ.சி.யூ., அல்லாத மருத்துவமனை அறைகளின் வாடகை நாளொன்றுக்கு, நபர் ஒருவருக்கு 5,000 ரூபாய்க்கு மேல் இருந்தால் அந்த தொகைக்கு 5% வரி.

