Wednesday, March 4, 2026
HomeUncategorizedஜூலை 5-ந்தேதி வரை தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு

ஜூலை 5-ந்தேதி வரை தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் தாக்கம் குறைய குறைய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.

வருகிற திங்கட்கிழமை காலையுடன் ஊரடங்கு முடிவுக்கு வர இருக்கிறது. மேலும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் ஜூலை 5-ந்தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என அறிவித்துள்ளார்.

மேலும், தொற்று குறைந்த அரியலூர், கடலூர், மதுரை, திருநெல்வேலி, திருச்சி  உள்ளிட்ட  23 மாவட்டங்களில் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஜவுளிக் கடைகள்  காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட  அனுமதி; வணிக வளாகங்கள், நகைக்கடைகளையும் திறக்க அனுமதியும், தீப்பெட்டி தொழிற்சாலைகள் 100 சதவிகித பணியாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளன.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments