இயக்குனர் பிரஷாந்த் நீல் தெலுங்கு நடிகர் ஜூனியர் என். டி. ஆர்- ன் படத்தை இயக்கவுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவலும் வெளியாகியிருந்தது. மேலும் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
