Friday, October 2, 2026
Homeசெய்திகள்அண்ணாமலையின் ‘Unfinished Hope’ புத்தகம் விரைவில் வெளியீடு! Amazon-ல் முன்பதிவு தொடக்கம்

அண்ணாமலையின் ‘Unfinished Hope’ புத்தகம் விரைவில் வெளியீடு! Amazon-ல் முன்பதிவு தொடக்கம்

வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் நிறுவனரான அண்ணாமலை எழுதியுள்ள ‘அன்ஃபினிஷ்ட் ஹோப்’ (Unfinished Hope – நிறைவேறாத நம்பிக்கை) என்ற புதிய புத்தகம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், தற்போது அமேசான் தளத்தில் இதன் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

பெருமை கொள்ளத்தக்க பல விஷயங்களை வழங்கி அதேவேளையில் பல கேள்விகளையும் எழுப்பும் நாட்டின் சித்திரத்தை வரைவதற்கான முயற்சியே இந்நூல் எனக் குறிப்பிட்டுள்ள அவர், இந்தியாவின் அசைக்க முடியாத மாபெரும் ஆற்றலில் பெரும்பகுதி இன்னமும் முழுமை பெறாமல் தேங்கிக் கிடப்பதாகவும், நாட்டின் பெருமிதம் கொள்ளும் அம்சங்கள் மற்றும் நிறைவேறாத எதிர்பார்ப்புகள் இதில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மாபெரும் தேசத்தின் இந்த நிறைவேறாத எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அழைப்பு விடுத்துள்ள அவர், இப்புத்தக விற்பனை மூலம் கிடைக்கும் முழு வருவாயும் ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பு மேற்கொள்ளும் சமூக நலப் பணிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments