Sunday, September 20, 2026
Homeசினிமா"வறுமையின் நிறம் சிவப்பு" ரிலீஸான நாள் இன்று!

“வறுமையின் நிறம் சிவப்பு” ரிலீஸான நாள் இன்று!

கே.பாலசந்தர், கமல்ஹாசன் ‘காம்போ’வின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று ‘வறுமையின் நிறம் சிவப்பு’. வறுமை மட்டுமே வாழ்வாகிப் போன, அன்றைய வேலையில்லாத இளைஞர்களின் அவலத்தைக் கொஞ்சம் ஆக்ரோஷமாகப் பேசிய சினிமா இதுவாக்கும்.

கதைக்களம்  டெல்லி. நாயகன்  ரங்கனாக கமல்ஹாசன், ஹீரோயின்  தேவியாக ஸ்ரீதேவி, பிரதாப்பாக பிரதாப் போத்தன், ரங்கனின் ஃப்ரண்ட்ஸூகளா திலீப், எஸ்.வி.சேகர், ரங்கனின் தந்தையாகப் பூர்ணம் விஸ்வநாதன், ஸ்ரீதேவியின் தந்தையாக ஒரு விரல் கிருஷ்ணாராவ் உட்பட பலர் நடிச்சிருந்த்தாய்ங்க. பிரதாப், அவர் சொந்தக் குரலில் டப்பிங் பேசியிருந்தார். வாய்ப்பேச முடியாத ஓவியக் கலைஞரா நடிச்ச பரணி, கே.பாலசந்தர் படங்களின் டிசைனர். அவர் நிஜமான ஓவியர் என்பதால் அந்த கேரக்டரில் அவரையே நடிக்க வைச்சிருந்தார்

.கமல் ஒரு கோபக்கார இளைஞனை  அப்ப்டியே எக்ஸ்போஸ் பண்ணியிருப்பார். ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மறைவுக்குப் பிறகுதான் ‘நெபோடிசம்’ அப்படீங்கற  வார்த்தை அதிகம் பேசப்பட்டுச்சு . ஆனால், அப்போதே, இந்தப் படத்தில் வரும் இன்டர்வியூ காட்சியில் கோபமாத் தன்னோட டிகிரி   சர்டிபிகேட்டுகளை கமல் கிழித்தெறியும்போது, ‘நெபோடிசம் டவுண் டவுண்’ என்ற வார்த்தையை அவர் மூலமாகப் பயன்படுத்தி இருப்பார் கே.பி.

 எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பாரதியாரின் நல்லதோர் வீணை செய்தே, தீர்த்த கரையினிலே பாடல்கள் வரவேற்பைப்பெற்றுச்சு. சிப்பி இருக்குது முத்து இருக்குது… இப்போதுவரை பலரசிகர்களின் ஃபேவரைட். ரங்கா ரங்கையா பாடலும் ஹிட்.

இந்தப் படத்தை இந்தியில் கமல்ஹாசன், அனிதா ராஜ் நடிப்பில் ‘ஜரா சீ ஜிந்தகி’ என்ற பெயரில் இயக்கி இருந்தார் பாலசந்தர். தெலுங்கில் ‘ஆகலி ராஜ்யம்’ என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வரவேற்பைப் பெற்றுச்சு 

தீபாவளிக்கு  இந்தப் படம் வெளியான நாளில் பாரதிராஜாவின் ‘நிழல்கள்’ படமும் வெளியாகி இருந்தது. 2 படங்களும் வேலையில்லாதிண்டாட்டத்தைத்தான் பேசின. 

1980-ம் ஆண்டில் இதே தேதியில் வெளியானது வறுமையின் நிறம் சிவப்பு. 45 வருடமானாலும் இன்றைய காலத்துக்கும் தேவையான விஷயத்தையே அந்தப் படம் பேசியிருந்துச்சு என்பதுதான் ஹைலைட்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments