Home Uncategorized காங்கிரஸ் மூத்த தலைவர் EVKS இளங்கோவன் மறைவு

காங்கிரஸ் மூத்த தலைவர் EVKS இளங்கோவன் மறைவு

தந்தை பெரியாரின் சகோதரர் ஈ.வெ.கிருஷ்ணசாமியின் பேரன்தான், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.

சென்னை மாநில கல்லூரியில் படித்த காலத்தில் மாணவரணி காங்கிரஸ் செயலாளராக இருந்தார். 1984ல் சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார்.

2004 மக்களவை தேர்தலில் கோபி., தொகுதியில் வென்று, 2009 வரை மத்திய இணையமைச்சராக செயலாற்றினார்.

2000-02, 2014 – 16 ஆகிய ஆண்டுகளில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பதவி வகித்தார்.

மகன் திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வென்று 2023ல் மீண்டும் எம்.எல்.ஏ. ஆனார் உடல்நலக் குறைவால் நவ.11ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

Exit mobile version