திருவண்ணாமலை, கார்த்திகை தீபத் திருநாள் 13.12.2024 அன்று வெள்ளிக்கிழமை மாலை 06.00 மணிக்கு நடைபெற உள்ளதை முன்னிட்டும்
14.12.2024 அன்று பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டும் .
12.12.2024 வியாழக்கிழமை முதல் 15.12.2024 ஞாயிற்றுக்கிழமை வரை பக்தர்கள் மற்றும் பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பாக சென்னையிலிருந்தும், தமிழ்நாட்டின் பிற முக்கிய நகரங்கள் மற்றும் அண்டை மாநிலங்களான பெங்களூரு, புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்தும் மேற்கண்ட நாட்களில் 4089 சிறப்பு பேருந்துகள் மூலம் 10110 நடைகள் இயக்கப்பட உள்ளது.
மேலும், திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள 9 தற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்து கிரிவலப்பாதையை இணைக்கும் வகையில் 40 சிற்றுந்துகள் கட்டணமில்லாமல் இயக்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

