Home Uncategorized கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா பரவல் – இன்று முதல் இரவுநேர ஊரடங்கு அமல்

கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா பரவல் – இன்று முதல் இரவுநேர ஊரடங்கு அமல்

இந்தியா முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா தொற்றின் பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில், தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கடந்த 3 நாட்களாக புதிய பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்திற்கும் அதிகமாக இருக்கிறது. இன்று மட்டுமே 30 ஆயிரத்திற்கும் அதிகமான பாதிப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது நாட்டின் மொத்த பாதிப்பில் 50 சதவீகிதத்திர்கு அதிகமாகும்.

மேலும், சமீபத்தில் ஓணம் உள்ளிட்ட சில பண்டிகைகளுக்காக விடப்பட்ட தளர்வுகள் காரணமாகவே அம்மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்ததாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.
 
ஆகவே, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கேரளாவில் இன்று முதல் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என முதல் அம்மாநில முதலமைச்சர் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்தார்.

Exit mobile version