இயக்குநர் வெற்றிமாறன் ‘ராஜன் வகையறா’ என்ற பெயரில் வெப் தொடர் ஒன்றை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதில், கென் கருணாஸ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக கென் கருணாசுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறதாம். கென் கருணாஸ் ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கிய ‘அசுரன்’ படத்தில் தனுஷின் மகனாக நடித்திருக்கிறார்.
