தமிழ்நாட்டில் மட்டுமில்லாம ஃபாரின்களிலும் ஆக்டர் விஜய்க்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு.
அந்த வகையில் அவரது ’கில்லி’ படம் லண்டனிலும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டிருக்குது.
தமிழகத்தைப் போலவே, லண்டனிலும் உள்ள விஜய் ரசிகர்கள் படத்தை கொண்டாடி இருக்கிறார்கள். ஆனா அங்கு படம் பார்க்க வந்த ரசிகர்கள் சிலர், தியேட்டருக்குள் திருட்டுத்தனமாக மதுபானங்களை எடுத்து வந்து குடிச்சிருக்காய்ங்க. குடிச்சுப்புட்டு அப்படி போடு.. போடு-ன்னு எல்லை மீறி ஆட்டமும் போட்டாய்ங்க.
இதனால், எழுந்த புகாரை அடுத்து தியேட்டருக்குள் போலீஸார் அதிரடியாக நுழைஞ்சாய்ங்கர்.
ஓடிக்கொண்டிருந்த படத்தை நிறுத்திவிட்டு, அங்கு கலாட்டா செய்தவர்களை குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்ராய்ங்க.
இதுதொடர்பான காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்குது
