Home Uncategorized கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி

கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மே 1 மற்றும் ஆகஸ்ட் 15-ம் தேதிகளில் கிராம சபை கூட்டம் நடைபெறவில்லை.
 
வரும் அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதியளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

கிராம சபை கூட்டம் நடைபெறும் இடங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளதால் அந்த 9 மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் கிராம சபை கூட்டங்களை நடத்தலாம் என்று தமிழக அரசு தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

Exit mobile version