Friday, March 6, 2026
HomeUncategorizedகமல்ஹாசனுடன் வைரமுத்து சந்திப்பு

கமல்ஹாசனுடன் வைரமுத்து சந்திப்பு

நட்பு நிமித்தமாகச் சந்தித்தேன் நண்பர் கமல்ஹாசன் அவர்களை ஒளிபடைத்த கண்களோடு உரையாடினார் அரசியல் பேசினோம்;

கலை குறித்துக் கலந்தாடினோம்; உடல் நிலை உணவு நிலை குறித்து அறிவாடினோம்; சமூக ஊடகங்கள் குறித்துத் தெளிவு பெற்றோம்

“செயற்கை நுண்ணறிவில் உங்களுக்குப் பயிற்சி உண்டா” என்றார் “செயற்கை நுண்ணறிவைக் கவிதைக்குப் பயன்படுத்தினேன்;

ஆனால் அதில் ஜீவன் இல்லை” என்றேன் அடுத்த படத்திற்கான தலைப்பைச் சொன்னார். “நன்று; யார் சொன்னாலும் மாற்றாதீர்கள்” என்றேன்

டெல்லிப் பட்டணத்திற்கான சமிக்ஞை தெரிந்துகொண்டேன் மகிழ்ந்து விடைகொண்டேன் -வைரமுத்து

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments