Friday, March 13, 2026
HomeUncategorizedகம்பன் கழகங்களை ஒருங்கிணைக்க முயற்சி - எஸ்.ஆர் அவர்கள் உரை.

கம்பன் கழகங்களை ஒருங்கிணைக்க முயற்சி – எஸ்.ஆர் அவர்கள் உரை.

024 புதுகை கம்பன் கழகத்தின் “கம்பன் பெருவிழா” வில் 10 ஆம் நாள் (21/07/2024) நிகழ்ச்சியின் இரண்டாம் நிகழ்ச்சியில் புதுகை கம்பன் கழகத்தின் சீர்மிகு தலைவர் திரு. எஸ்.ராமச்சந்திரன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது: அடுத்த ஆண்டு (2025) கம்பன் பெருவிழாவிற்கான முன்னேற்பாடுகளை கம்பன் கழகச்செயலாளர் திரு.ரா.சம்பத் அவர்கள் இப்போதே தொடங்கி விட்டதாக தெரிவித்தார்.

மேலும் “கம்பன் கழங்கள் எங்கெல்லாம் நடைபெற்றுவருகின்றனவோ அவற்றையெல்லாம் ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு தமிழின் மாட்சிமையையும், கம்பனின் பெரும்புகழை மேலும் அலங்கரிக்கும் வகையில் செயல்பாடுகள் துரிதப்படுத்தப்படும் ” என்று உறுதியுடன் முழங்கியபோது முக்கிய பிரமுகர்கள் மற்றும் விழாவில் கலந்து கொண்ட பொதுமக்கள் அனைவரும் பலத்த கரவொலி எழுப்பி வரவேற்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments