Home Uncategorized கம்பன் பெருவிழா தேதி அறிவிப்பு

கம்பன் பெருவிழா தேதி அறிவிப்பு

புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் விழாக் குழுக் கூட்டம் தலைவர் திரு எஸ் ராமச்சந்திரன் அவர்கள் தலைமையில் கம்பன் கழக அலுவலகத்தில் நடைபெற்றது.

49 ஆம் ஆண்டு கம்பன் பெருவிழாவை 12/ 7 /2024 வெள்ளிக்கிழமை தொடங்கி 21/7/2024 ஞாயிற்றுக்கிழமை வரை வழக்கம் போல் பத்து நாட்கள் சிறப்பாக கொண்டாடுவது என்று முடிவு செய்து தேதியைத் தலைவர் அறிவித்தார்.

விழாமங்கலம், விருதளிப்பு, பட்டிமன்றம், வழக்காடு மன்றம், கவிதைச்சோலை, சுழலும் சொல்லரங்கம், நற்றமிழ் முற்றம், கவியரங்கம், ஏழில் உரை,

பரிசளிப்பு, கம்பநாட்டியம், பாட்டுமன்றம், சந்திப்பு வளையம், கனல் உரை, கம்பனிசைஅரங்கம், உள்ளிட்ட பல்வேறு வகையான நிகழ்ச்சிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது. கம்பன் கழக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Exit mobile version