தன் வீட்டின் கட்டுத்தறியையும் கவிபாட வைத்த கம்பன் தமிழுலகின் அரிய வரம். அத்தகைய கம்பனின் பெயரால் காரைக்குடி, புதுக்கோட்டை போன்ற பல்வேறு ஊர்களில் ”கம்பன் கழகங்கள்”சிறப்புற இயங்கி வருகின்றன. ஏன்… கடல் கடந்தும் கூட இருக்கலாம். ஆனாலும் முதன்முதலில் கம்பனின் பெயரால் ஒரு கழகம் தோற்றுவிக்கப்பட்டு, அது கடந்த 92 ஆண்டுகளாக வெற்றிகரமாக தொடர்ந்து நடந்து வருகிற பெருமையானது கம்பர் அவதரித்த “தேரழுந்தூர்” என்கிற புண்ணிய பூமியில்தான் என்பது வரலாற்றில் மறைக்கவோ, மறக்கவோ முடியாத செய்தி.
தேரழுந்தூர் கம்பர் கழகத்தின் சார்பில் 93 ஆம் ஆண்டிற்கான கம்பர் கழக விழாவானது, மயிலாடுதுறை மாவட்டம், தேரழுந்தூர் சன்னதி தெருவில் அமைந்துள்ள கம்பர் கோட்டம் எனப்படும் கம்பர் திருண மண்டபத்தில் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் (சனிக்கிழமை & ஞாயிற்றுக்கிழமை) விமரிசையான விழாவாக நடைபெற உள்ளது.
மேற்படி விழாவின் முதல் நாள் (ஜனவரி 7 ஆம் தேதி) காலை 10.31 மணிக்கு மங்கல இசையுடன், அருள்மிகு ஆமருவியப்பன் திருக்கோயிலில் கம்பர் வழிபாட்டினை மேற்கொள்வதுடன், ”கம்பராமாயண நூல்” திருவீதியுலா நடைபெறுகிறது.
காலை 11 மணிக்கு கம்பர் கோட்டத்தில் அமைந்துள்ள கம்பன் அடிப்பொடி.ச.கணேசன் அரங்கத்தில், செல்வி .சீ.பிரேமா இறை வணக்கம் பாட, திருமதி. சித்ரா முத்துக்குமார், திருமதி. அனுராதா சீனிவாசன், திருமதி, சுகுணா பாலசுப்ரமணியன், திருமதி. லதா நாகராஜன், திருமதி. சுமதி மணிகண்டன் ஆகியோர் திருவிளக்கேற்றி வைக்க, திரு. மு.ஜானகிராமன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த, கண்டாச்சிபுரம் கம்பன் கழக நிர்வாகிகளான தலைவர். திரு.பொ.சுப்ரமணியன் அவர்கள், செயலாளர் திரு. அ.கருணாகரன், செயற்குழு உறுப்பினர் திரு.சு. திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகிக்க, தருமை ஆதீன27 வது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சரிய சுவாமிகள் ஆசிவழங்கி தலைமையுரை ஆற்ற, “இராமாயண மணி” தேரழுந்தூர் புலவர்.திரு . இரா. அரங்கராஜன் அவர்கள் விழாவின் அறிமுக உரையை ஆற்ற, மகிழ்வுரையை ஆன்மீகச் சொற்பொழிவாளரும், எழுத்தாளரும் ”ஸ்ரீ காஞ்சி மஹாபெரியவர் அருள்பெற்றவருமான ஆன்மீகச்செம்மல்” திரு.இநதிரா செளந்தர்ரராஜன் அவர்கள் நிகழ்த்த, புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் துணை பொருளாளர் திரு.கறு.இராமசாமி அவர்கள் நன்றி நவில்கிறார்.
