புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் செயலாளரும், அனைத்து கம்பன் கழங்களின் ஒருங்கிணைப்பாளரும், சமூகநல ஆர்வலரும், பல்வேறு அமைப்புகளின் நிர்வாகியுமான ”வல்லத்திராக்கோட்டை ரா.சம்பத்குமார் அவர்கள்” சமீபத்தில் அமரரானதை முன்னிட்டு, அன்னாரது திருவுருவப்படத் திறந்துவைத்து, புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுக்கோட்டை கம்பன் கழகம் ஏற்பாடு செய்த இந்நிகழ்ச்சியானது 2025 மார்ச் 1 ஆம் தேதி புதுக்கோட்டை ஏ.டி.ஆர். திருமண மண்டபத்தில் மாலை 5.30 மணியளவில் தொடங்கியது.
கம்பன் கழகத்தின் துணைத்தலைவர் திரு.எம்.ஆர்.எம். முருகப்பன் அவர்கள் வரவேற்புரை ஆற்ற, பெருந்தொழிலதிபரும் புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் தலைவருமான திரு. எஸ். ராமச்சந்திரன் அவர்கள் அறிமுக உரை நிகழ்த்தினார்.
குன்றக்குடி, திருவண்ணாமலை ஆதீனம், தவத்திரு.குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்கள் ஆன்ம உரை வழங்கினார்.
புதுதில்லி உச்சநீதி மன்ற மாண்பமை நீதியரசர் திரு.அரங்க.மகாதேவன் அவர்கள் தெய்வத்திரு.ரா.சம்பத்குமார் அவர்களின் திருவுருவப்படத்தை திறந்து வைத்து புகழுரையாற்றினார்.
சென்னை உயர்நீதிமன்ற மாண்பமை நீதியரசர் திரு. ஜி.ஜெயச்சந்திரன், மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் மாண்பமை நீதியரசர் தி.வி.பாரதிதாசன், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி திரு. செ.ராஜேந்திரன், தினமணி நாளிதழ் ஆசிரியர் திரு.கி. வைத்தியநாதன், மதுரை கம்பன் கழகத்தலைவர். திரு.சங்கர. சீதாராமன், இராமேஸ்வரம் கம்பன் கழகத்தலைவர்.திரு.முரளிதரன், தில்லி கம்பன் கழகத்தலைவர்.திரு. கே.வி.கே.பெருமாள், கள்ளிப்பட்டி கம்பன் கழகத்த்லைவர் திரு. கா.கு.கோ.சு.காகுத் கார்த்திகேயன், மூத்தகுடிமக்கள் அமைப்பு மற்றும் திருக்குறள் கழகத்தின் திரு.க.ராமையா, புதுக்கோட்டை தமிழ்ச்சங்கத்தின் தலைவர். திரு. தங்கம் மூர்த்தி, திருவருள்பேரவை பொருளாளர்.திரு.ஆர்.சேவியர், மாவட்ட வர்த்தக கழகத் தலைவர் ஹாஜி.என்.சாகுல்ஹமீது, வழக்கறிஞர் திரு.ஏ.சந்திரசேகரன், திருக்கோயில் பேரியக்கம் திருமதி.மல்லிகா வெங்கட்ராமன், சிறுதொழில் அதிபர்கள் சங்கம் திரு.எஸ்.ராஜ்குமார் ஆகியோர் நினைவுரை ஆற்றினார்கள்.
ரா.சம்பத்குமார் அவர்களின் குடும்பத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மாண்பமை நீதியரசர்.திரு. ஆர்.சுரேஷ்குமார் அவர்கள் ஏற்புரை வழங்கினார்கள்.
நிகழ்ச்சியின் முடிவில் கம்பன் கழகத்தின் துணைப்பொருளாளர் திரு.கறு.ராமசாமி அவர்கள் நன்றியுரையாற்றினார்.
புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் கூடுதல் செயலாளர் புதுகை.ச.பாரதி நிகழ்ச்சிக்கான நெறியாள்கை செய்து தொகுப்புரை வழங்கினார்.
மறைந்த ரா.சம்பத்குமார் அவர்களின் வாழ்வியலை விளக்கும் வகையில் காணொலிக் காட்சி திரையிடப்பட்டது. அது அரங்கில் கூடியிருந்த அனைவரையும் ஈர்க்கும் வகையில் அமைந்தது.
இந்த நிகழ்ச்சியில் புதுக்கோட்டை சமஸ்தான ராணியாரும், திருச்சி முன்னாள் மாநகராட்சி மேயருமான திருமதி.சாருபாலா தொண்டைமான், முன்னாள் அமைச்சர். திரு.விஜயபாஸ்கர், இலக்கியவாதி மரபின் மைந்தன் முத்தையா, பிரபல பாடகர்கள் செந்தில் கணேஷ் – மனைவி ராஜலெஷ்மி தம்பதியினர், அமரர் கம்பன் அடிப்பொடி சா.கணேசன் அவர்களின் குடும்பத்தினர், பல்வேறு ஊர்களைச் சேர்ந்த கம்பன் கழக நிர்வாகிகள், இலக்கியவாதிகள், தமிழார்வலர்கள், ஏராளமான வர்த்தகர்கள், சம்பத்குமார் அவர்களின் உறவினர்கள், வல்லத்திராக்கோட்டை மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த திரளான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
விழாநிறைவில் வந்திருந்த அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை புதுக்கோட்டை கம்பன் கழக நிர்வாகிகள் சிறந்த முறையில் திட்டமிட்டு நடத்தியது அனைவராலும் பாராட்டப்பட்டது.
