கங்கை கொண்ட சோழபுரம் அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி உடனுறை ஶ்ரீ பெருவுடையார் ஆலய (84-ஆம் மாதம்) பௌர்ணமி கிரிவல பெருவிழா.
நிகழும் ஶ்ரீ குரோதி வருடம் புரட்டாசி மாதம் 1-ந் தேதி (17-09-2024) செவ்வாய் கிழமை மாலை 3:00 மணிக்கு அருள்மிகு ஸ்ரீகணக்க விநாயகர் ஆலயத்தில் மகா அபிஷேகம் , தீபாராதனையும் மாலை 5:00 மணிக்கு அருள்மிகு ஸ்ரீ பெருவுடையார் மற்றும் பெரியநாயகி அம்பாளுக்கு மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெறும்.
அதனை தொடர்ந்து மாலை 5:30 மணிக்கு பெளர்ணமி கிரிவலம், பன்னிரு திருமுறை வீதி உலா மற்றும் 7:00 மணிக்கு அன்னதானம் வழங்குதல் நடைபெறும், அனைவரும் வருக இறையருள் பெருக
