Wednesday, March 18, 2026
HomeUncategorizedகண்ணதாசன், எம்.எஸ்.விஸ்வநாதன் இருவர் இன்று பிறந்தநாள்

கண்ணதாசன், எம்.எஸ்.விஸ்வநாதன் இருவர் இன்று பிறந்தநாள்

கவியரசு கண்ணதாசன், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இருவருக்கும் இன்று பிறந்தநாள்.

30 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழ்த் திரையுலகை ஆளுமை செய்தவர்கள் இவர்கள் பாசமலர் படத்தில் இடம்பெற்ற மலர்ந்தும் மலராத பாதி மலர் போல.. இந்தப் பாடலைக் கேட்போருக்கு, இசையைக் கவிதை அலங்கரிக்கிறதா, கவிதையை இசை அலங்கரிக்கிறதா என்ற கேள்வி எழும்..

கண்ணதாசன்- விஸ்வநாதன் ராமமூர்த்தி கூட்டணியில் உருவானதுதான் மனதை உருக்கும் இந்தப் பாடல். காதலுக்கு இதைவிட சிறப்பான வரிகளைத் தர முடியாது எனுமளவுக்கு கண்ணதாசன் எழுதிய பாடல்கள் ஏராளம்.

தத்துவம்,ஆன்மீகம், காதல்,சோகம், பாசம் என்று எந்த உணர்ச்சியையும் தனது எழுத்தால் உயிர்ப்பிக்க செய்தவர் கண்ணதாசன் என்றால், அதை இசையால் தாலாட்டியவர் எம்.எஸ்.வி. கொடியசைந்ததும் காற்று வந்ததா, காற்று வந்ததும் கொடியசைந்ததா என்று கண்ணதாசன் கேட்டதுபோல் எம்.எஸ்.வி இசையால் கண்ணதாசன் பாடல் இனித்ததா அல்லது கண்ணதாசன் வரிகளால் எம்.எஸ்.வி. இசைக்கு மெருகேறியதா என வியக்காதவர் இருக்க முடியாது.

வாலி,புலமைப்பித்தன்,வைரமுத்து உள்ளிட்ட பல கவிஞர்களின் பாடல்களுக்கு எம்.எஸ்.வி இசையமைத்தாலும், கண்ணதாசன் பாடல்கள் தனித்துத் தெரிகின்றன. கே.வி.மகாதேவன் இளையராஜா, சங்கர்-கணேஷ், போன்ற பல இசையமைப்பாளர்களுக்கு கண்ணதாசன் பாடல்கள் எழுதியிருந்தாலும், எம்.எஸ்.வி. இசையமைத்த பாடல்கள் தனித்துவம் பெற்று விளங்கின.

தமிழ் திரையுலகிற்கு கூட்டணி அமைத்து கொடை தந்த இருவரும் ஒரே தேதியில் பிறந்தது ஆச்சரியமானது. அவர்களின் கைவண்ணத்தில் உருவான பாடல்கள் அரை நூற்றாண்டைக் கடந்தும் மக்களின் காதுகளில் இனிமை குறையாமல் ரீங்காரமிட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments