Home Uncategorized weekend வந்தாச்சு, என்னப்பா ட்ரிப் போக ரெடியா?

weekend வந்தாச்சு, என்னப்பா ட்ரிப் போக ரெடியா?

அருவிகள் நிறைந்த காந்தலூர் தென்னிந்தியாவில் தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களின் எல்லையில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் அமைந்திருக்கும் காந்தலூர் என்னும் மலை கிராமம் அழகும், பசுமையும் நிறைந்தது. மேற்கு தொடர்ச்சி மலையின் கிழக்கு சரிவில் அமைந்துள்ள இந்த கிராமம் வேளாண்மையில் சிறப்புமிக்கது. மேலும் பலவிதமான காய்கறிகள் மற்றும் பழங்கள் அங்கு விளைவிகின்றனர்.
குறிப்பாக ஆப்பிள், ப்ளம்ஸ், கொய்யா, பேரிக்காய், ஆரஞ்சு, மாதுளை போன்றவை அதிகம் உள்ளன. இங்கு வாழும் மக்களில் தொண்ணூறு சதவீதம் தமிழர்கள் ஆவர், மற்றும் சிலர் மலையாளம் மற்றும் தெலுங்கு பேசுகின்றனர்.

சென்னையிலிருந்து 550 கிலோமீட்டர் தூரம் சென்று உடுமலைப்பேட்டை வழியாக ஆனைமலை புலிகள் காப்பகத்தை அடைந்து பின்னர் மூணார் செல்லும் பாதையில் காந்தளூருக்கு செல்லலாம். கேரளாவில் அமைந்திருப்பதால், நான்கு செக்போஸ்ட்களை கடந்து சென்று காட்டுப்பகுதிகள் வழியாக வனவிலங்குகளை கண்டு ரசிக்கலாம், குறிப்பாக காட்டெருமைகள், யானைகள், மான்கள், மயில்கள் போன்ற விலங்குகளையும், பறவைகளையும் காணலாம்.

செல்லும் வழியில் அழகிய இயற்கை காட்சிகள் கண்களுக்கு இதமாக இருக்கும். மறையூர் என்னும் ஊரை அடைந்து அங்கிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் காந்தலூர் உள்ளது. காந்தளூரில் உள்ள அருவிகளில் இறைச்சி பாறை நீர்வீழ்ச்சி மிகவும் பாதுகாப்பானது, இங்கு நீராடி மகிழலாம். உல்லாவயல் நீர்வீழ்ச்சிக்கு சிறிது கடினமான ஒரு கிலோமீட்டர் நடைபயணம் செய்து செல்ல வேண்டும், ட்ரெக்கிங் செல்வோருக்கு அற்புதமான இடம். இங்கு பெரிய நீர்வீழ்ச்சி அமைதியாக ஊற்றிக் கொண்டிருக்கும், அதன் அழகை ரசிக்கலாம். முருகன் பாறை மலை ஜீப் சபாரிக்கு ஏற்றது, பாறைகளில் ஓடுவது திரில்லிங்காக இருக்கும். இந்த மலையில் உள்ள பாறை குகைகள் சித்தர்கள் குகைகள் என்றும் அழைக்கப்படுகின்றன, அவை 2000ஆண்டுகளுக்கு பழமை வாய்ந்த பாறை கற்களால் கட்டப்பட்ட குகைகள் உள்ளன இந்த குகைகளை சித்தர்கள் குகைகள் சித்திரக்குள்ள புகை என்றும் அழைக்கின்றார்கள்.

அடுத்தது பிரம்மாரம் வியூ பாயிண்ட் என்பது பச்சை பசேல் என்று அழைக்கப்படும் எலுமிச்சைப்புல் வளரும் இடமாகும், இங்குள்ள காற்று மிகவும் தூய்மையானதும், மருத்துவ குணங்கள் கொண்டதும் ஆகும். இந்த இடத்தை லெமன் கிராஸ் வேலி என்றும் கூறுவர். பிரம்மாரம் வியூ பாயிண்டில் சன்செட் நேரத்தில் சென்று சூரிய அஸ்தமனத்தை கண்டு ரசிப்பது அழகும், ரம்யமும் ஆகும். மேலும், ஒரு மலை உச்சியிலிருந்து பார்க்கும் ஒற்றை மலை வியூ பாயிண்ட் மிக அழகானது, இங்கிருந்து ஆணை முடி மலை தெரியும்.

புல்வெளிகள், நீர்வீழ்ச்சிகள், இயற்கை அழகுகள், மலைத்தொடர்கள் ஆகியவற்றை கண்டு களிக்கலாம், இயற்கையான காற்றை சுவாசித்து நண்பர்களுடன் குடும்பங்களுடன் வந்து என்ஜாய் செய்யலாம். இங்கு தங்கும் வசதிகள் உள்ளன, தனியார் விடுதிகள் தற்போது அதிகமாகி வருகின்றன. த்ரீ ஹவுஸ் கேம்பிங், கேம்பயர், நீர்வீழ்ச்சி குளியல் என பல்வேறு வசதிகள் இங்கு உள்ளன. நீங்களும் உங்கள் குடும்பத்தினருடன் குழந்தைகள், நண்பர்களுடன் இங்கு வந்து தாராளமாக நேரத்தை கழிக்கலாம்.

Exit mobile version