ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி கிருஷ்ண ஜெயேந்தியாக கொண்டாடப்படுகின்றது. கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி, கிருஷ்ணாஷ்டமி என்று பல பெயர்களில் கண்ணனின் பிறந்தநாள் நாடு முழுதும் கொண்டாடப்படுகின்றது.
தேவகிக்கும் வசுதேவருக்கும் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த கண்ணன், கோகுலத்தில் யசோதைக்கும் நந்தகோபருக்கும் மகனாக வளர்ந்தார். மூன்று வயது வரை கோகுலத்திலும், 3 – 6 வயது வரை பிருந்தாவனத்திலும், 7 வயதில் கோபியர் கூட்டத்திலும், 8 – 10 வயது வரை மதுராவிலும் கண்ணனின் இளம் வயது கழிந்தது. தனது ஏழாவது வயதில் கம்சனை வதம் செய்து பெற்றோரை விடுவித்தான் கண்ணன்.
கிருஷ்ணர் ஜெயந்தி அன்று வீடுகளில் கிருஷ்ணரின் கால் தடங்கள் வரைந்து, வெண்ணெய், அவல் பாயசம், அவல் லட்டு, உப்பு சீடை, வெல்ல சீடை, அப்பம், தட்டை, முள்ளு முறுக்கு, தோயம், வெண்ணை பால்திரட்டு, ரவா லட்டு, ஆகியவற்றை செய்து கிருஷ்ணருக்கு படைக்கப்படுகின்றன.
by TaboolaSponsored Links
