Friday, June 26, 2026
HomeUncategorizedகொரோனா வைரஸ் வேகமாக பரவுவதற்கு காரணம் -உலக சுகாதார அமைப்பு

கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதற்கு காரணம் -உலக சுகாதார அமைப்பு

சீனா உள்ளிட்ட பிற ஆசிய நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதற்கு காரணமான புதிய வகை தொற்று பாதிப்பு இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது.

ஹாங்காங், சிங்கப்பூர், சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது.

இந்தியாவில் இதுவரை 257 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸின் புதிய திரிபுகளான NB.1.8.1 மற்றும் LF.7 தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

சீனா உள்ளிட்ட பிற ஆசிய நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதற்கு இந்த வகை கொரோனா காரணமாக கூறப்படுகிறது.

இந்த இரண்டு வகை தொற்றுகளும் அதிக வீரியம் இல்லாதவை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருப்பது ஆறுதலாக அமைந்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments