Home Uncategorized கோவை, தேனி உள்பட 7 மாவட்டங்களில் இன்று கனமழை – வானிலை ஆய்வு மையம் தகவல்

கோவை, தேனி உள்பட 7 மாவட்டங்களில் இன்று கனமழை – வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஒரு சில இடங்களில் மழையும், மிக கனமழைம் பெய்து வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் இன்றும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, காற்றின் திசைவேக மாறுபாடு மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று கோவை, நீலகிரி, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தேனி ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

 

Exit mobile version