Home Uncategorized கோவையில் யூடியுபில் விளம்பரம் பார்த்தால் லாபம் கிடைக்கும் என நூதன எம்.எல்.எம். மோசடி

கோவையில் யூடியுபில் விளம்பரம் பார்த்தால் லாபம் கிடைக்கும் என நூதன எம்.எல்.எம். மோசடி

கோவையில் யூடியுபில் விளம்பரம் பார்த்தால் லாபம் கிடைக்கும் என நூதன எம்.எல்.எம். மோசடி நடைபெறுவதாக புகார் அளிக்கப்பட்டது. புகார் தொடர்பாக கோவை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் வழக்கு பதிவுசெய்த நிலையில் எம்.எல்.எம். நிறுவனத்துக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கானோர் திரண்டு போலீசைக் கண்டித்தனர்

கிட்டத்தட்ட 7 ஆயிரம் பேர் திரண்ட நிலையில், காவல்துறையை எச்சரிக்கும் வகையில் எம்.எல்.எம். நிறுவன அதிபர் ஆடியோ வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தங்கள் நிறுவனத்துக்கு ஆதரவாக கோவையில் திரளும் மக்களை போலீஸ் தடுக்கக்கூடாது என எம்.எல்.எம். நிறுவன அதிபர் ஆடியோ வெளியிட்டு எச்சரிக்கை  விடுத்தார்.

Exit mobile version