கோயில் திருவிழா ஆடல், பாடல் நிகழ்ச்சியில் அரசியல் கட்சியின் பிளக்ஸ் போர்டுகள் இருக்கக் கூடாது. எந்த ஒரு அரசியல் கட்சி அல்லது மதம், சமூகம் அல்லது சாதியை குறிப்பிடும் விதத்தில் பாடல்களோ அல்லது நடனமோ இருக்க கூடாது. எந்த அரசியல் கட்சி அல்லது மதத்துக்கும் ஆதரவாக எதிராகவோ ஃப்ளெக்ஸ் போர்டுகள் வைக்க கூடாது.
மேலும் ஜாதி அடிப்படையில் எந்த பாகுபாடும் இருக்கக் கூடாது, இரட்டை அர்த்த பாடல்கள் இடம்பெறக்கூடாது. நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் குட்கா பொருட்களையோ, மதுபானத்தையோ உட்கொள்ளக் கூடாது.
மேலும் பொது மக்களுக்கு அல்லது போக்குவரத்திற்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்தக் கூடாது என்றும், நிகழ்ச்சி இரவு 7 மணி முதல் 10 மணி வரை மட்டுமே நடத்த வேண்டும் என கடுமையான நிபந்தனைகளை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
