கர்ப்பிணிப் பெண்களுக்கு 7 வது மாதம் அல்லது 9 வது மாதம் செய்யப்படும் சடங்கு வளைகாப்பு எனப்படும் “வளையல் காப்பு”.
இந்த வளையல்காப்பு நிகழ்ச்சி ஏன் நடத்தப்படுகிறது? அதனால் என்ன பயன்?
திருமணமான பெண்ணொருவள் கர்ப்பம் தரித்தபின், சுகமான சுமையாக அதனை சுமக்கிறாள். தனக்குப் பிடிக்கிறதோ இல்லையோ கருவில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு எது அவசியமோ அதனை உண்கிறாள். உடல்ரீதியாக பல்வேறு அசெளகரியங்களை அவள் அனுபவித்தாலும், அத்தனை வேதனைகளையும் தன் குழந்தைக்காக தாங்கிக் கொள்கிறாள். மன ரீதியாகவும் பல்வேறு உளைச்சல்களுக்கு ஆளாகிறாள்.
