Home Uncategorized குழந்தைகளுக்கு ஏற்படும் சளியை போக்குவது எப்படி?

குழந்தைகளுக்கு ஏற்படும் சளியை போக்குவது எப்படி?

வழிமுறைகள்.:

பொதுவாக மழை மற்றும் குளிர் காலம் ஆரம்பம் ஆகிவிட்டால் இயற்கையாகவே பிள்ளைக்குக்கு சளி தொல்லை ஆரம்பம் ஆவது உண்டு இத்தனை தவிர்க்க சில இயற்கை வழிமுறைகள்.

சில சித்தமருத்துவ முறைகள்.:
வெற்றிலை 2-3,
மிளகு 4-5,
சீரகம் 10,

இவற்றை தூய நீரில் போட்டு சிறிது நேரம் கொதிக்க விட்டு சாறு எடுத்து 2 நாட்களுக்கு ஒரு முறை பிள்ளைகளுக்கு கொடுக்கலாம்.

துளசி 10 இலைகள்,
சீரகம் 10,
மிளகு 4-5,

இவற்றை கொதிக்க வைத்து வாடி கட்டி தேன் கலந்து கொடுக்கலாம். தேன் இயற்கை மருந்து அதனை சித்த மருத்துவத்தில் அதிகம் உபயோக படுத்துவர்.

கற்பூர வள்ளி /ஓமவல்லி 10 இலைகள்,
பூண்டு 3 பல்,
சீரகம்,

இவற்றை லேசா வாட்டி எடுத்து கொதிக்க வைத்து வடி கட்டி கொடுக்கலாம்.

இவற்றில் முக்கியமா விஷயம் எது என்றால், சளி பிடித்தா தான் மருந்து கொடுக்க வேண்டும் என்பது இல்லை.

இவை இயற்கை வழிமுறைகள் என்பதால் முன்னெச்சரிக்கைக்காக கூட கொடுக்கலாம்.

சளி பிடிக்காமல் தடுக்கலாம் அதோடு இவை பசியை தூண்ட கூடியவை.

Exit mobile version