குன்றத்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் பாலாலயம் மற்றும் திருப்பணி துவக்க விழா இன்று நடந்தது.
இராஜகோபுரம், பரிவார சன்னதிகள் மற்றும் பரிவார விமானங்கள் கட்டும் திருப்பணிகளை ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கு.செல்வ பெருந்தகை, காஞ்சிபுர மாவட்ட ஊராட்சி தலைவர் படப்பை ஆ.மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
