Saturday, May 16, 2026
Homeசெய்திகள்முதலமைச்சர் விஜய்யின் நேரடி கட்டுப்பாட்டில் முக்கியத் துறைகள்!

முதலமைச்சர் விஜய்யின் நேரடி கட்டுப்பாட்டில் முக்கியத் துறைகள்!

தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கவுள்ள முக்கியத் துறைகள் மற்றும் இலாகாக்களின் அதிகாரப்பூர்வ விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, மாநிலத்தின் மிக முக்கியப் பிரிவுகளான பொதுத்துறை, பொது நிர்வாகம், உள்துறை, காவல்துறை மற்றும் உளவுத்துறை ஆகியவை முதலமைச்சரின் நேரடிப் பொறுப்பில் வருகின்றன.

இவற்றுடன், இந்திய ஆட்சிப் பணி (IAS), இந்தியக் காவல் பணி (IPS), இந்திய வனப் பணி (IFS) மற்றும் மாவட்ட வருவாய் அதிகாரிகள் (DRO) உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரத்துவப் பிரிவுகளும், அரசின் முக்கியத் திட்டங்களைக் கண்காணிக்கும் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையும் அவரே கவனிப்பார்.

மேலும், சமூக நலனில் முக்கியப் பங்காற்றும் மகளிர் நலன், இளைஞர் நலன், குழந்தைகள் நலன், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத் துறைகளும், உள்ளாட்சி நிர்வாகத்தைச் சீரமைக்கும் நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் குடிநீர் வழங்கல் துறைகளும் முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் இயங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments