Home Uncategorized திருச்செந்துார் மஹா கும்பாபிஷேகம் பிரம்மாண்டமாக நடைபெற்றது!

திருச்செந்துார் மஹா கும்பாபிஷேகம் பிரம்மாண்டமாக நடைபெற்றது!

முருப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 2023ல் பெருந்திட்ட வளாக பணிகள் மற்றும் திருப்பணிகள் துவங்கின. பணிகள் நிறைவடைந்த நிலையில், இன்று காலை 6.20 மணியளவில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதை முன்னிட்டு, கோவிலுக்குள் நேற்று மதியம், 12:00 மணிக்கு பின் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. 12ம் கால யாகசாலை பூஜை அதிகாலை, 4:00 மணிக்கு நடைபெற்றது. தொடர்ந்து, ராஜகோபுர கும்ப கலசங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது.

murugan temple

Exit mobile version