Tuesday, June 23, 2026
Homeடிஜிட்டல்வாட்ஸ்அப்பின் புதிய தலைவராக குணால் ஷா; மார்க் ஜுக்கர்பெர்க் அறிவிப்பு!

வாட்ஸ்அப்பின் புதிய தலைவராக குணால் ஷா; மார்க் ஜுக்கர்பெர்க் அறிவிப்பு!

மெட்டா (Meta) நிறுவனத்தின் சிஇஓ மார்க் ஜுக்கர்பெர்க் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், கடந்த 7 ஆண்டுகளாக வாட்ஸ்அப் (WhatsApp) நிறுவனத்தின் தலைவராக இருந்து, அதனை உலகளவில் 300 கோடிக்கும் அதிகமான மக்களிடம் கொண்டு சேர்த்ததோடு, பயனர்களின் தனியுரிமைக்காகப் (Privacy) பாடுபட்ட மெட்டாவின் மிக முக்கியத் தலைவரான வில் கேத்கார்ட் (Will Cathcart) தனது பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.

அவரது சிறப்பான பங்களிப்பிற்குத் தனது நன்றியைத் தெரிவித்துள்ள ஜுக்கர்பெர்க், வில் கேத்கார்ட் மெட்டா நிறுவனத்திற்குள்ளேயே ஒரு புதிய பொறுப்பிற்கு மாறி, ஆரம்பக் கட்டத்திலிருந்து புதிய தயாரிப்புகளை உருவாக்கும் பணியை மேற்கொள்ள உள்ளதாகவும், அவருடன் தொடர்ந்து இணைந்து பணியாற்ற ஆவலாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, வாட்ஸ்அப் நிறுவனத்தின் அடுத்த புதிய தலைவராக இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ‘கிரெடிட்’ (CRED) நிறுவனத்தை உருவாக்கி சாதனை படைத்த குணால் ஷா (Kunal Shah) மெட்டா நிறுவனத்தில் இணைய உள்ளார் என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ள ஜுக்கர்பெர்க், உலகிலேயே மிகப்பெரிய செய்திப் பரிமாற்றச் செயலியான வாட்ஸ்அப்பை வழிநடத்த குணால் ஷாவின் உலகளாவிய பார்வையும், புதியவற்றை உருவாக்கும் மனப்பான்மையும் பெரிதும் உதவும் என்றும், கோடிக்கணக்கான மக்கள் மற்றும் மில்லியன் கணக்கான வணிகங்களுக்கு வாட்ஸ்அப் சிறந்த சேவையை வழங்குவதை அவரோடு இணைந்து தொடர எதிர்நோக்கியிருப்பதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments