Wednesday, September 23, 2026
HomeUncategorizedகுன்றத்தூர் திருநாகேச்சர பெருமான் கோயில் திருக்குடமுழுக்கு

குன்றத்தூர் திருநாகேச்சர பெருமான் கோயில் திருக்குடமுழுக்கு

குன்றத்தூர் அருள்மிகு காமாட்சி அம்மை உடனுறை அருள்மிகு திருநாகேச்சர பெருமான் திருக்கோயில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா(மஹா கும்பாபிஷேகம். வருகிற 11/12/2022 ஞாயிற்றுக்கிழமை காலை 6:30 மணி முதல் 8:30 மணிக்குள் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.

அதன் பின்பு காலை 10:00 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்று உள்பிராகார உற்சவம் மற்றும் மகா அபிஷேகம் நடைபெறும். இரவு 07:00 மணிக்கு காமாட்சி அம்மை உடனுறை திருநாகேச்சர பெருமான் வெள்ளி இடப(ரிஷப) வாகன திருக்காட்சி பஞ்ச மூர்த்திகள் நான்மாட வீதி உலா மற்றும் சேக்கிழார் பெருமான் எதிர் சேவை நடைபெற உள்ளது.

பக்த கோடிகள் அனைவரும் வந்து இருந்து தரிசனம் செய்து காமாட்சி அம்மை உடனுறை திருநாகேச்சர பெருமான் திருவருளை பெறுக திங்கட்கிழமை அன்று யாக சாலை பூஜைகள் தொடங்க உள்ளன.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments