Tuesday, February 17, 2026
Homeசெய்திகள்சன் டிவி - இசைஞானி இளையராஜா இடையிலான சட்டப் போராட்டம்!

சன் டிவி – இசைஞானி இளையராஜா இடையிலான சட்டப் போராட்டம்!

சன் டிவி – இசைஞானி இளையராஜா இடையிலான சட்டப் போராட்டம்

பின்னணி: தனது ‘ஆளுமை உரிமைகளை’ (Personality Rights) பாதுகாப்பதற்காக இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் ‘ஜான் டோ’ (John Doe) என்ற சிறப்பு வழக்கைத் தொடர்ந்தார். இதில், அவரது அனுமதி இன்றி அவரது பெயர், புகைப்படம் அல்லது குரலைப் பயன்படுத்த இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.

சன் டிவியின் மனு:

37 தொலைக்காட்சிகள் மற்றும் 69 எஃப்எம் ரேடியோ நிலையங்களை நடத்தும் சன் டிவி நிறுவனம், தற்போது இந்தத் தடையை மாற்றியமைக்கக் கோரி நீதிமன்றத்தை அணுகியுள்ளது.

வாதம்:

இந்தத் தடை மிகவும் விரிவானதாக இருப்பதால், செய்தி ஒளிபரப்பு மற்றும் அன்றாடப் பணிகளில் சிக்கல் ஏற்படுவதாக சன் டிவி தரப்பு கூறுகிறது.

அதாவது இளையராஜாவின் ஆளுமை உரிமைகளுக்குக் கிடைத்துள்ள இடைக்காலத் தடையால் தங்களின் ஒளிபரப்பு பாதிக்கப்படுவதால், அதில் திருத்தம் செய்யக் கோரி சன் டிவி மனு தாக்கல் செய்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments