Thursday, July 9, 2026
Homeஉலகம்மாணவர்களுக்காக லெனோவாவின் புதிய AI போன்... சமூக ஊடகங்கள் இல்லை, படிப்பே முக்கியம்!

மாணவர்களுக்காக லெனோவாவின் புதிய AI போன்… சமூக ஊடகங்கள் இல்லை, படிப்பே முக்கியம்!

பள்ளி செல்லும் குழந்தைகளைக் கவரும் வகையிலும், அவர்களின் கவனச்சிதறல்களைத் தவிர்க்கும் வகையிலும் லெனோவா (Lenovo) நிறுவனம் ‘ஏஐ ஸ்டூடண்ட் போன் எல்1’ (AI Student Phone L1) என்ற புதிய ரக கைபேசியை அறிமுகப்படுத்தியுள்ளது.

தற்போதைய நவீன ஸ்மார்ட்போன்களைப் போலல்லாமல், இந்த போனில் சமூக ஊடக செயலிகள், கேம்கள் மற்றும் இணைய உலாவிகள் (Web Browsers) போன்ற எவ்வித அம்சங்களும் இடம்பெறவில்லை; மேலும் இவற்றைத் தனியாகப் பதிவிறக்கம் செய்யவும் முடியாது. அதற்குப் பதிலாக, மாணவர்கள் தங்களின் பாடங்கள் தொடர்பான சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ள பிரத்யேக ‘ஏஐ வாய்ஸ் பட்டன்’ இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பொது அறிவு, கணித சூத்திரங்கள் மற்றும் ஆங்கிலக் கல்வி போன்றவற்றுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் மாணவர்கள் எளிதாகப் பதில்களைப் பெற முடியும். இவற்றுடன், குழந்தைகளின் பாதுகாப்பைக் கருதி உடனுக்குடன் அவர்களின் இருப்பிடத்தைக் கண்டறியும் ஜிபிஎஸ் (GPS) கண்காணிப்பு வசதி, அவசரக் காலத்திற்கான எஸ்ஓஎஸ் (SOS) பொத்தான் மற்றும் பெற்றோர்கள் தங்களின் மொபைல் செயலி மூலம் போனின் பயன்பாட்டு நேரத்தைக் கட்டுப்படுத்தும் வசதிகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

முதற்கட்டமாக சீனச் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த சாதனம், தேவையற்ற ஆன்லைன் உள்ளடக்கங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்து, படிப்பில் கவனம் செலுத்த உதவும் ஒரு சிறந்த தகவல் தொடர்பு கருவியாகப் பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments